மாற்றுத்துணி கூட இல்லாமல் லண்டனில் அவதிப்படும் நடிகை.! சிம்பு பட நடிகையின் கண்ணீர் வீடியோ.?

மாற்றுத்துணி கூட இல்லாமல் லண்டனில் அவதிப்படும் நடிகை.! சிம்பு பட நடிகையின் கண்ணீர் வீடியோ.?


Simbu movie actress latest video viral

"சிலம்பாட்டம்" படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் சனா கான். பாலிவுட் நடிகையான இவர், தொடர்ந்து பரத்துடன் "தம்பிக்கு எந்த ஊரு" படத்திலும் நடித்திருந்தார். மீண்டும் சிம்புவுடன் "அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்" படத்திலும் நடித்திருந்தார். 

simbu

தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்த சனா கானுக்கு, தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய சனா கான், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சூரத்தைச் சேர்ந்த முப்தி அனாத் சையத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஜூலை மாதம் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், லண்டனுக்கு தன் கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சனா கான், அங்கிருந்து தொடர்ந்து வீடியோக்களை வெளிட்டு வருகிறார். 

simbu

அதில், "லண்டன் வந்து இறங்கி இரண்டு நாட்களாகியும் எங்களது லக்கேஜ் இன்னும் வரவில்லை. இரண்டு நாட்களாக மாற்றுத்துணி கூட இல்லாமல் ஒரே உடையில் இருக்கிறோம். குழந்தைக்கு கூட டயாப்பர், மாற்றுத்துணி இல்லாமல் அவதிப்படுகிறோம்" என்று கூறி வருகிறார்.