சினிமா

ப்பா.. சிம்புவிற்கே பஞ்ச் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்! அடுத்த படம் இவருடன்தானோ! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

நடிகர் சிம்பு தனது உடல்  எடையை குறைத்ததிலிருந்து அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்

நடிகர் சிம்பு தனது உடல்  எடையை குறைத்ததிலிருந்து அவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் சிம்பு மற்றும் சுசீந்திரன் கூட்டணியில் சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இந்நிலையில் சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபுவின் கூட்டணியில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சிம்புவுக்கு பெரும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் குண்டு தயாரிப்பாளர் என செல்லமாக அழைக்கப்படும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் ரவீந்திரன் அடிக்கடி நடிகர் சிம்புவை சந்திப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் சிம்புவை சந்தித்த அவர் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பார்த்தா தெரியுறது நடிப்பு, பழகினா தான் தெரியும் நட்பு, இவர் மேல சில பேருக்கு வெறுப்பு, அதற்கு அவர் இல்லை பொறுப்பு' என்ற பஞ்ச் உடன் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் சிம்புவின் அடுத்த படம் இவருடனா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இந்த சந்திப்பு நட்பு ரீதியாக நடைபெற்றது எனவும் கூறப்படுகிறது.


Advertisement