சினிமா

அடேங்கப்பா.. இவரா! கொரோனா குமார் படத்தில் நடிக்க ஓகே சொன்ன பிரபல முன்னணி நடிகர்! யாருனு தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க!!

Summary:

கோகுல் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இதற்

கோகுல் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, மொட்டை ராஜேந்திரன், பசுபதி, சூரி, , மதுமிதா, அசோக் செல்வன், சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், விஜய் சேதுபதியின் நடிப்பு போன்றவை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

இந்நிலையில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக, அதன் தொடர்ச்சியாக 'கொரோனா குமார' என்ற பெயரில் படத்தை இயக்கப்போவதாக இயக்குனர் கோகுல் அறிவித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா குமார் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து நதிகளில் நீராடும் சூரியன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது கைவசம் சில்லுனு ஒரு காதல் திரைப்பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல  என்ற திரைப்படமும் உள்ளது.


Advertisement