வாவ்.. செம மாஸ் லுக்கில் அசத்தும் சிம்பு! ரசிகர்களை உற்சாகப்படுத்திய மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

வாவ்.. செம மாஸ் லுக்கில் அசத்தும் சிம்பு! ரசிகர்களை உற்சாகப்படுத்திய மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!


simbu manadu shooting spot photo viral

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் சிம்பு ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து நடிக்கவுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். மேலும் இதில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். 

மேலும் அவர்களுடன் பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ், ஒய் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  இந்த நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

மேலும் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் விரைவில் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி அந்த படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், படக்குழு தகவல் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்பு செம மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.