நடிகர் சிம்புவா இது! என்ன இப்படி ஆகிட்டாரே! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் சிம்புவா இது! என்ன இப்படி ஆகிட்டாரே! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!


simbu-latest-weight-loss-photo-viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு இடையில் நன்கு உடல் எடை  கூடியிருந்த நிலையில் தீவிர உடற்பயிற்சிக்குப் பிறகு எடையை குறைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிம்பு கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் சிம்பு எலும்பும் தோலுமாக காணப்பட்டார். வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு 15 கிலோ உடல் எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு தற்போது சட்டை இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மிகவும் ஒல்லியாக இருக்கும் சிம்புவை காணும்போது கண்கள் கலங்குவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.