ஓ மை கடவுளே.. பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு! யார்னு பார்த்தீங்களா!!

ஓ மை கடவுளே.. பிரபல இயக்குனருடன் இணையும் சிம்பு! யார்னு பார்த்தீங்களா!!


simbu-join-with-director-aswath-marimuthu

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் நடிகர் சிம்பு.  சினிமாத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அவதாரமெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 

மேலும் அண்மையில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம்  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு தற்போது பத்து தல, கொரோனா குமார், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

simbu

இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. அஷ்வத் மாரிமுத்து ஓ மை கடவுளே படத்தை இயக்கியவர். மேலும் தனது முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெற்றவர். மேலும் அவர் தற்போது ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.