என்னதான் அஜித் ரசிகனா இருந்தாலும், அதுக்குன்னு அப்படியேவா காப்பி அடிப்பது? வைரலாகும் வீடியோ!

என்னதான் அஜித் ரசிகனா இருந்தாலும், அதுக்குன்னு அப்படியேவா காப்பி அடிப்பது? வைரலாகும் வீடியோ!


simbu fans set banner in occean like viswasam movie

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட நிலையில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள், சுந்தர் சி ரசிகர்கள் என அனைவரும் படம் பார்க்க மிகப்பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தனது படத்திற்கு பாலபிஷேகம் வேண்டாம், கட்டவுட் வைக்கவேண்டாம் என சிம்பு கூறிய நிலையில் அதே சிம்பு சில நாட்கள் கழித்து மிகப்பெரிய அளவில் கடவுட் வையுங்கள், பாக்கெட் பால் ஊத்தவேண்டாம், அண்டா நிறைய பாலபிஷேகம் செய்யுங்கள் என கூறி வெளியிட்ட வீடியோ வைரலானது.

simbu

தற்போது விஸ்வாசம் படம் பாணியில் சிம்புவிற்கு கடலுக்குள் கடவுட் வைத்துள்ளார்கள் அவரது ரசிகர்கள். தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு தல ரசிகர்கள் கடலுக்குள் கட்டவுட் வைத்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது அஜித்தின் தீவிர ரசிகனான சிம்புவுக்கும் அவரது ரசிகர்கள் கடலுக்குள் கட்டவுட் வைத்துள்ளனர். என்னதான் அஜித் ரசிகனா இருந்தாலும், அப்படியேவா காப்பி அடிப்பது என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.