சினிமா

எனக்கா ரெட் கார்டு? சும்மா பாடல் மூலம் பதிலடி கொடுத்த சிம்பு, வைரலாகும் கலக்கலான வீடியோ உள்ளே.!

Summary:

simbu answered to vishal by song

தனக்கு ரெட் கார்டு கொடுக்க இருப்பதாக கூறிய  தயாரிப்பாளர் சங்கத்திற்கு, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் அதற்கான இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிம்பு விநியோகஸ்தர்களுக்கு அளிக்கவேண்டிய பண பிரச்சினையைத் தீர்த்தால்தான் படம் ரிலீஸ் செய்யமுடியும் என்றும், சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் மூலம் ரெட் கார்டு (நடிப்பதற்கு தடை) போடப்போவதாகவும்  படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் சிம்பு ரசிகர்கள் பொங்கியெழுந்தனர்.

இந்நிலையில் சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்திள் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகளை பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு” என வரிகள் இடம்பெற்றுள்ளது.
இது தயாரிப்பாளர் சங்கத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.


 


Advertisement