பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
கௌதம் மேனன் மற்றும் சிம்பு இருவருக்கும் இடையில் மோதலா.? கௌதம் மேனனின் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிம்பு.!
கௌதம் மேனன் மற்றும் சிம்பு இருவருக்கும் இடையில் மோதலா.? கௌதம் மேனனின் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சிம்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் தற்போது வரை தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் சிம்பு சில வருடங்களாக திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரும் ஹிட்டானது. இதன் பிறகு 'வெந்த தணிந்தது காடு' போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
சிம்பு விற்கும், கௌதம் மேனனிற்கும் இடையில் மோதல் என்று கோலிவுட் திரையுலகினர் கிசுகிசுத்து வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சிம்பு மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படங்களை கௌதம் மேனன் இயக்க உள்ளார் என்று சிம்புவிற்கு தெரிந்ததும் வேணாம் என்று மறுத்து விட்டாராம். இச்செய்தி பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.