சினிமா

என்ன தான் தமிழ் பெண்ணாக இருந்தாலும் இவர்கள் தான் எனக்கு ஆதரவு கொடுத்தார்கள்! நெகிழ்ச்சியாக பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன்!

Summary:

Shruthihazan open talk

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் கமல் ஹாசன். இவரின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். ஸ்ருதி ஹாசன் முதலில் தேவர் மகன் என்ற படத்தில் பாடகியாக திரையிலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு படத்தில் நடித்து ஹுரோயினாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர் என்ற பல திறமைகளை கொண்டவர். மேலும் இவர் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதி ஹாசன் என்ன தான் தமிழ் பெண்ணாக இருந்தாலும் முதலில் எனக்கு ஆதரவு கொடுத்தது தெலுங்கு சினிமா தான் என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி டோலிவுட்டும் எனக்கு வீடு போலத்தான் என கூறியுள்ளார். மேலும் தனது வெற்றி இங்கு தான் ஆரம்பமானது என்றும் கூறியுள்ளார்.


Advertisement