அடேங்கப்பா.. ஒரு பாடலுக்கு இவ்வுளவு சம்பளம் வாங்குகிறாரா? பிரபல பாடகி.!



Shreya Ghoshal Singer Highest Salary in Film Industry Woman

தமிழ் திரையுலகில் பிண்ணனி பாடகர்கள் மிகக்குறைவாகவே இருந்து வருகிறார்கள். இவர்களில் பாட்டுக்கு ரூ.4 இலட்சம் சம்பளம் வாங்கும் பெருமைமிக்க பாடகராக சித் ஸ்ரீராம் இருந்து வருகிறார். 

பாடகிகளில் அதிகளவு சம்பளம் வாங்கும் இந்தி பாடகியாக ஸ்ரேயா கோஷல் இருந்து வருகிறார். இவர் பாட்டுக்கு ரூ.3 இலட்சத்தில் இருந்து மூன்றரை இலட்சம் வரை வாங்குகிறார். 

மேற்கு வங்கம் மாநிலத்தை சார்ந்த ஷ்ரேயா கோஷல், 4 முறைகள் தேசிய விருதையும் பெற்றுள்ளார். தனது 16 வயதில் இருந்து இந்தி பாடல்கள் பாட தொடங்கிய ஸ்ரேயா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், அசாமி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி மொழிகளில் என பாடல் பாடியுள்ளார். 

cinema

தமிழில் சில்லுனு ஒரு காதல் படத்தில் உள்ள முன்பே வா மற்றும் வெயில் படத்தில் உள்ள உருகுதே மருகுதே, அந்நியன் படத்தில் உள்ள அண்டங்காக்கா, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உள்ள மன்னிப்பாயா ஆகிய பாடல்களை பாடியுள்ளார். 

இவருக்கு அடுத்த இடத்தில், பாடலுக்கு ரூ.2 இலட்சம் வாங்கும் பாடகி சாதனா சர்கம், மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த இசை பின்னணி குடும்பத்தை சார்ந்தவர். இவர் மின்சார கனவு படத்தில் உள்ள வெண்ணிலவே பாடல், அலைபாயுதே படத்தில் உள்ள ஸ்நேகிதனே பாடல் போன்றவையும் பாடியுள்ளார்.