திமிரு பட வில்லியை நியாபகமிருக்குதா.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா.?



Shreaya reddy glamour photos viral

தமிழ் சினிமாவில் பெண் நடிகைகள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ஜொலித்து வருவது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே. அந்த வரிசையில் 2006 ஆம் வருடம் விஷால் நடிப்பில் வெளியான 'திமிரு' திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா ரெட்டி.

Shreaya

இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் முதல் திரைப்படமே திமிரு தான். முதல் படமே இவருக்கு மிகப்பெரும் பெயர் பெற்று தந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இப்படத்திற்கு பின்பு வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இப்படங்கள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் தமிழ் சினிமாவில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.

Shreaya

தற்போது மாடலிங்கிலும், தெலுங்கு மொழி சினிமாக்களில் நடிப்பதிலும் பிஸியாக இருந்து வருகிறார் ஸ்ரேயா ரெட்டி. இவரின் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரேயா ரெட்டி பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.