சிறுவயதிலிருந்து ஷெரின் அனுபவித்த சோகம் !! பிக்பாஸ் நிகழ்ச்சியால் நேர்ந்த அதிசயம்!!அவரே கூறிய மகிழ்ச்சி தகவல்!!

சிறுவயதிலிருந்து ஷெரின் அனுபவித்த சோகம் !! பிக்பாஸ் நிகழ்ச்சியால் நேர்ந்த அதிசயம்!!அவரே கூறிய மகிழ்ச்சி தகவல்!!


Sherin saw her father by bigboss show

தமிழ்சினிமாவில்  துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு சில படங்களில் ஒற்றைப் பாடலுக்கும் நடனமாடியுள்ளார். இந்நிலையில் ஷெரின் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இவர் 105 நாட்கள் கடந்த நிலையில் இறுதிகட்டத்திற்கும் சென்றார். 
 
 ஷெரின் சிறு வயதில் இருந்தே ஏராளமான கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளார். செரினுக்கு மூன்று வயதாக இருக்கும் போதே அவரது தந்தை பெண் குழந்தை என்பதால் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து தந்தை இல்லாத கஷ்டமே தெரியாத அளவிற்கு ஷெரினின் தாயார் அவரை அன்புடன் வளர்த்து வந்துள்ளார்.

bigboss

இந்நிலையில் தனது தந்தையை பற்றிய யாபகமே இல்லாமல் இருந்த ஷெரின்  பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் சேரனை கண்டதும் தனது தந்தையை எண்ணி ஏங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷெரின் தனது தந்தை தற்பொழுது ஈரான் நாட்டில் இருப்பதாகவும், அவர் ஒருமுறை தன்னிடம் ஸ்கைப் மூலம் பேசியதாகவும் கூறியுள்ளார், மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.