சினிமா

மீண்டும் விஜய் டிவியில் ரீஎன்ட்ரி கொடுக்கும் ஷெரின்! எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

Summary:

Sherin

தமிழ்சினிமாவில் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார். 

 மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம்,  தமிழ்,  மலையாளம் தெலுங்கு, படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் இவர் 105 நாட்கள் கடந்த நிலையில் இறுதிகட்டத்திற்கு சென்றார்.       

  

அதனை தொடர்ந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்சிங் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சிக்கு புதிய நடுவராக வந்தவர் யார் என கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளனர. 

அதற்கு ரசிகர்கள் அனைவரும் அது பிக்பாஸ் ஷெரின் என பதில்களை கூறி வருகின்றனர். 


Advertisement