ஏர்போர்ட்டில் ரசிகரின் செல்போனை கோபமாக தூக்கியடித்த ஷாருக்கான்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?

ஏர்போர்ட்டில் ரசிகரின் செல்போனை கோபமாக தூக்கியடித்த ஷாருக்கான்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?


Sharuk khan angry at airport video viral

கோலிவுட் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான். அது போல பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் நடித்த பல படங்கள் மிகபெரிய ஹிட்டாகி மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவருக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Sharuk khan

மேலும் சமீபத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படமான 'பதான்' திரைப்படம் மிகபெரிய ஹிட்டாகி வசூரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகபெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது அட்லி இயக்கத்தில் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஷாருக்கான் ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்து தூக்கியெறிந்த சம்பவம் வீடியோவாக பதிவாகி இணையதளத்தில் பரவி வருகிறது. இதன்படி ஷாருக்கான் படபிடிப்பு முடிந்த ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார்.

Sharuk khan

இதைப்பார்த்து எரிச்சலடைந்த ஷாருக்கான் அவரின் செல்போனை கோபமாக புடுங்கி தூக்கியடித்த காட்சி வீடியோவில் பதிவாகியது. அதில் ரசிகர்கள் ஷாருக்கானை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.