சினிமா

மீண்டும் சினிமாவில் ஹீரோவாக மாஸ் எண்ட்ரி கொடுக்கும் தல அஜித்தின் மச்சான்.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Summary:

shalini vrother richard act in new movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்த இவர் அமர்க்களம் படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷாம்லி என்ற தங்கையும், ரிச்சர்டு என்ற சகோதரனும் உள்ளனர்

1990ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்ற  படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரிச்சர்ட். இந்த படத்தை தொடர்ந்து அவர் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார்.அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த இவர் பெருமளவில் பிரபலமாகவில்லை.

இந்நிலையில் அவர் தற்போது மூன்று வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். மேலும் திரௌபதி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பழைய வண்ணாரப்பேட்டை பட இயக்குநர் மோகன் இயக்குகிறார். மேலும் திரெளபதி கேரக்டர்ல ஷீலா ராஜ்குமார் என்பவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு நடிகர் ரிச்சர்ட் முழுவதும் மாறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

 


Advertisement