சினிமா

வீட்டை விட்டு ஓடிவந்துட்டேன்.! இந்த இளம் பிரபல நடிகை செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா!! அதுவும் ஏன் தெரியுமா??

Summary:

என்னது.. வீட்டை விட்டு ஓடிட்டாரா! இந்த இளம் பிரபல நடிகை செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா!! அதுவும் ஏன் தெரியுமா??

தெலுங்கு சினிமாவில் கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர் ஷாலினி பாண்டே. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஷாலினி பாண்டே தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார்.

நடிகை ஷாலினி பாண்டே தற்போது பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். அதாவது அவர்  ஜெயேஷ்பாய் ஜோர்தாய் என்ற  படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் திவ்யங் தாக்கர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. அப்பொழுது பேசிய ஷாலினி பாண்டே தான் வீட்டை விட்டு ஓடி வந்த கதையை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் எஞ்சினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது அப்பாவின் ஆசை. ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை. நான் நடிகையாக வேண்டும் என என் பெற்றோரிடம் கூறினேன். ஆனால் அதற்காக 4 வருடமாக போராடியும் எந்த பலனும் இல்லை. என் பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் நான் வீட்டை விட்டு ஓட முடிவு செய்தேன். அப்பொழுது அது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தற்போது எனது பெற்றோர்கள் என்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.


Advertisement