சினிமா

குழந்தையை சாப்பிட விடாமல் பப்ளிசிட்டி செய்யும் நடிகை சாக்‌ஷி - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Summary:

Shakshi offer food in kulaithaigal kappagam

சாக்ஷி அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

2018-ம் ஆண்டில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று இன்னும் பிரபலமானார்.இந்நிலையில் சமீபத்தில் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்கு குழந்தைகளுக்கு உணவு வழங்குவது போன்று போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பப்ளிசிட்டிக்கு போஸ் கொடுக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement