சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் ஷகிலா படம்! காத்திருக்கும் ரசிகர்கள்!

Summary:

Shakeela life story Movie


தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு 'நாட் ஏ பார்ன் ஸ்டார்' என்ற பெயரில் தயாராகவுள்ளது. 

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள இயக்குனர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் என கூறுகின்றனர்.

actress shakila life story make a movie

இந்த படத்தில் ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார். சிறப்புத் தோற்றங்களில் ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் காட்சிப்படுத்த அப்படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement