மோகன் வைத்யாவை வெச்சு செய்த சிக்சர் டிரைலர் - வைரலாகும் வைபவ் பட காமெடி.
மோகன் வைத்யாவை வெச்சு செய்த சிக்சர் டிரைலர் - வைரலாகும் வைபவ் பட காமெடி.

வைபவ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர். இவர் எப்போதும் வித்யாசமான படங்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார்.
தற்போது அறிமுக இயக்குனர் காசி இயக்கியுள்ள படம் தான் சிக்சர். இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை வால்மேட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் வேலைகள் முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது.
மாலை கண் நோயால் அவதிப்படும் ஒருவரின் வாழ்க்கையை மிகவும் சுவாரசியத்துடனும் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படமாக்கியிருக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் 30ல் வெளியாகவுள்ளது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் வைபவுடன் இணைந்து பாலக் லால்வானி, ராதாரவி, சதிஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. அதில் ஒரு இடத்தில் பிக்பாஸ் மோகன் வைத்யா அவர்களை கலாய்ப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.