சினிமா

சன் டிவியில் புதிதாக வரும் சீரியலால் அதிரடி மாற்றங்கள்! கெத்தான கதாபாத்திரத்தில் வருகிறார் ரியாஸ் கான்!

Summary:

serial changes in sun tv

தமிழ் தொலைக்காட்சிகளில் தற்போது வரை முதல் இடத்தில் இருப்பது சன் டிவி தான். அதற்க்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்கள்தான். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்கள் அனைத்தும் சினிமாவை போல மிகவும் பிரமாண்டமாக போய்க்கொண்டிருக்கின்றன. இதனால் தான் இந்த சேனலுக்கு இளம் வயது முதல் முதியவர் வரை ரசிகர்கள் உள்ளனர்.

 சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சினிமா பிரபலங்கள் பலர் நடித்துவருவதால், ஆரம்பகாலத்தில் இருந்து இந்த தொலைக்காட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ராதிகா, ரம்யா கிருஷ்ணன், தேவையணி, குஷ்பு, ரேவதி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சன்டிவியில் நடித்துள்ளனர். சமீபத்தில் தொடங்கிய ரன் சீரியலை, தல அஜித்தை சினிமாவில் அறிமுகபடுத்திய இயக்குனர் இயக்கி வருகிறார்.

சன் டிவியில் சமீபத்தில் முடிந்த நந்தினி சீரியலில் ரியாஸ் கான் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது மகராசி என்னும் புதிய பிரமாண்ட தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ்கான் நடிக்கின்றார். 

தற்போதுவரை சன் டிவியில் காலை 11:30 க்கு அருந்ததி மறுஒளிபரப்பு தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. அந்த இடத்தில் 12:30 PMக்கு ஒளிபரப்பான மஹாலக்ஷ்மி சீரியலும், 02:30 PMக்கு ஒளிபரப்பான நிலா தொடர் 12:30 PMக்கும், புத்தம் புதிய மகராசி மெகா தொடர் 02:30 PMக்கும் வரும் திங்கள் கிழமையில்(21.10.2019) இருந்து ஒளிபரப்ப உள்ளனர். அதற்கான ப்ரோமோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.


Advertisement