சினிமா

பார்வையிலேயே பரவசப்படுத்தும் சீரியல் நடிகை வாணிபோஜன் வைரல் புகைப்படம்!

Summary:

சீரியல் நடிகை வாணிபோஜன்னின் பச்சை வண்ண பைங்கிளி புகைப்படம்.

சீரியல் நடிகை வாணிபோஜன்னின் பச்சை வண்ண பைங்கிளி புகைப்படம்.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன்.தெய்வமகள் சீரியலில் சத்தியா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வாணிபோஜனை பார்ப்பதற்காகவே தெய்வமகள் சீரியல் பார்த்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் நடித்தவர் இவரது நடிப்பின் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தாவினார்.

 தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகிவரும் வாணிபோஜன் அடுத்ததாக விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், பச்சை நிற உடையில் அழகிய சிரிப்புடன் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement