சினிமா

இப்படி ஒரு குத்தாட்டம் இனிமேலும் தேவையா ஷிவானி? முத்தம் கொடுத்து முழுசா கவுத்த ஷிவானி.. வைரல் வீடியோ..

Summary:

இப்படி ஒரு குத்தாட்டம் இனிமேலும் தேவையா ஷிவானி ? முத்தம் கொடுத்து முழுசா கவுத்த ஷிவானியின் டான்ஸ் வீடியோ..

சீரியல் நடிகை மற்றும்  இளசுகளின் அரசியாக இருக்கும் ஷிவானி நாராயணன் பற்றி அறிமுகம் தேவையில்லை. இவரை பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு முதலில்  அழகு பொம்மையாகவே வலம் வந்து பின்னர் பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தற்போது அதிக படவாய்ப்புகளை கைவசம்  வைத்துள்ளார்.

அந்த  வகையில் ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இதைத்தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகும் வீட்ல விசேஷங்க என்ற படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் அண்மையில்  செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் பம்பர் என்ற படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவ்வாறு பயங்கர  பிஸியாக  இருந்தாலும் ரசிகர்களை  மகிழ்விக்கும் வகையில் , அவர் தற்போது கருப்பு உடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதோ  அந்த வீடியோ...

 


Advertisement