தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை ரேகாவின் கணவர்! அதிர்ச்சி தகவல்.



serial-actress-rekha-husband-suicide

சின்னத்திரை நடிகைகளில் பிரபலமானவர்களில் ஒருவர் ரேகா. தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் துணை நடிகையாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோபிநாத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றிவரும் கோபிநாத்துக்கும், அங்கு பணிசெய்யும் வேறொரு பெண்ணிற்கும் தொடர்பு இருந்தததாகவும், இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

suicide

மேலும், அதிகப்படியான கடன் சுமையும் இருந்ததாக கூறப்படும் நிலையில் அலுவலகம் சென்ற கோபிநாத் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். கோபிநாத் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் தங்கள் இரங்கலை ரேகாவின் குடும்பத்திற்கு தெரிவித்துவருகின்றனர்.