தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினி பிரியங்கா இல்லை.! அவருக்கு பதில் களமிறங்கிய பிரபல சீரியல் நடிகை.! யார்னு பார்த்தீங்களா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என இரு பிரிவுகளாக பிரம்மாண்டமாக நடைபெறும். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் தற்போது வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக உள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர்
தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நடைபெற்று வருகிறது. இதில் பாடகர்கள் சித்ரா, மனோ மற்றும் டி.இமான் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது தொகுப்பாளர்கள் மாகாபா மற்றும் பிரியங்காதான். இருவரும் காமெடியாக அனைவரும் ரசிக்கும் வகையில் நிகழ்ச்சியை நடத்தி வந்தனர்
இதையும் படிங்க: அரசியல் குடும்பத்தில் இணைந்த பிரியங்கா.! அவரது கணவர் குறித்து வெளிவந்த முக்கிய பின்னணி!!
தொகுப்பாளினியான மகாநதி நாயகி
தொகுப்பாளினி பிரியங்காவிற்கு அண்மையில் வசி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதனால் அவர் இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை லட்சுமி பிரியா தொகுத்து வழங்கவுள்ளார். இதுகுறித்த ப்ரோமோ வீடியோ அதிகாரபூர்வமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தொகுப்பாளினி பிரியங்கா திருமணம் செய்துள்ள வசி யார் தெரியுமா?? இருவருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா!!