பிரபல சின்னத்திரை நடிகை மீண்டும் கர்ப்பம்; நட்சத்திர ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்.!



Serial Actress Gayatri Pregnant 2nd baby 

 

சின்னத்திரையில் ரசிகர்களால் பல நாயகிகள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இவர்களில் முக்கியமானவர் காயத்ரி யுவராஜ். 

தென்றல் தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான காயத்ரி, அழகி, மோஹினி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல தொடர்களில் நடித்து வந்தார். 

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வருகிறார். சீரியலை தாண்டி பல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். 

இவர் நடன இயக்குனர் யுவராஜை திருமணம் செய்துகொண்ட நிலையில், தம்பதிக்கு மகன் இருக்கிறார். இதற்கிடையில், இரண்டாவதாக மீண்டும் காயத்ரி கர்ப்பமாக இருக்கிறார்.