சினிமா

இந்த லுக்கே கிக் ஏத்துதே!! பாவாடை தாவணியில் பங்கம் பண்ணும் சீரியல் நடிகை ஷிவானி!!

Summary:

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பாவாடை தாவணியில் பார்க்க பளிச்சென இருக்கும் சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு சீரியல் இவருக்கு பெரியளவில் வெற்றியை தேடி தந்தது.

பகல் நிலவு சீரியலை அடுத்து கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்துவந்த இவர், ஒருசில பிரச்சனையால் சீரியலில் இருந்து விலகினார். பின்னர் இரட்டை ரோஜா சீரியலில் நடித்துவந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது பாவாடை தாவணியில் பார்க்க பளபளன்னு இருக்கும் புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.


Advertisement