சினிமா

அவரது கேவலமான செயலால்தான் நான் நடிப்பையே விட்டேன், பிரபல சீரியல் நடிகரின் சில்மிஷங்களை அம்பலப்படுத்திய நடிகை சாண்ட்ரா.!

Summary:

serial actor sex abused to actress santra

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

  serial actor prakash rajan க்கான பட முடிவு

இந்நிலையில் ட்விட்டரில்  #METOO -ல் பிரபல சீரியல் நடிகை சான்ரா ஒரு சீரியல் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கூறியுள்ளார்.இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜனின் மனைவியாவார். 

அந்த பதிவில், நான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தலையணை பூக்கள் என்ற சீரியலில் நடித்து வந்தேன்.அந்த நாடகத்தில் ஸ்ரீ காம்  என்பவர் முதலில் நடித்து வந்தார். பின்னர் அவருக்கு பதிலாக பிரகாஷ் ராஜன் என்ற நபர் நடித்து வந்தார்.வர அப்பொழுது தெய்வமகள் சீரியலிலும் நடித்துவந்தார்.  அவர் எப்போது படப்பிடிப்பில் பெண்களிடம் பாலியல் றீதியாக மிகவும் கொச்சையாக கேலி செய்து கொண்டே இருப்பார், அதனால் அவருடன் நான் தள்ளியே இருந்தேன்.

ஒரு முறை பிரகாஷ் என்னிடம் கொஞ்சம் மோசமாக பேசினார் அதனால் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் தயரிப்பாளர் ரவி என்பவரிடம் புகார் அளித்தேன். ஆனால், எனக்காக அவனை ஒரு முறை மன்னித்து விடு என்று சமாதானம் செய்தார். பின்னர் ஒரு நாள் நான் படப்பிடிப்பில் இருந்த போது நடிகர்,நடிகை ஒன்றாக நடிக்கும் காட்சி வந்தது.அப்பொழுது  பிரகாஷ் எனது மார்பகத்தை பற்றியும், இடுப்பை பற்றியும் மிகவும் கொச்சையாக விமர்சித்து சிரித்தான்.

எனக்கு அங்கேயே அழுகை வந்துவிட்டது அன்று படப்பிடிப்பு முடிந்ததும் நான் மீண்டும் பிரகாஷ் மீது புகார் அளித்தேன். அப்போது தயரிப்பாளர் பிரகாஷிடம் கேட்ட போது மற்ற பெண்கள் எல்லாம் அமைதியாக தானே இருகாங்க இவளுக்கு மட்டும் என்ன என்று கூறினார். அதன் பின்னர் நான் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள மீண்டும் அழைப்பு வந்தது. ஆனால், நான் மிகவும் புண்பட்ட மனதுடன் அந்த சீரியலில் இருந்து விலகினேன் என்று பதிவிட்டுள்ளார் சான்ரா.
இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


Advertisement