ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி ஆகியாச்சு.. பிரபல நடிகையுடனான காதலை போட்டுடைத்த விஜய் டிவி நடிகர்!!



serial-actor-salmanul-reveal-his-love-with-actress-megh

மௌன ராகம் நடிகர் 

சமீப காலமாக சின்னத்திரை தொடர்களில் ரீல் ஜோடியாக நடித்தவர்கள், திருமணம் செய்து ரியல் ஜோடியாக மாறி வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சல்மானுல் பிரபல சீரியல் நடிகையுடனான தனது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் மௌன ராகம் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் சல்மானுல் ஃபரிஸ்.

பிரபல நடிகையுடன் காதல் 

இவர் மலையாள தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சல்மானுல் மலையாளத்தில் ஒளிபரப்பான மிழி ரண்டிலும் என்ற தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை மேகா மகேஷை காதலிப்பதாக, இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

அதிகாரபூர்வ அறிவிப்பு 

அந்த பதிவில் அவர், எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, அக்கறை, ஏற்ற இறக்கங்கள், துன்பங்கள், பயணங்கள் என அனைத்தையும் ஒன்றாக பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளோம் எங்களுக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி என குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

இதையும் படிங்க: 90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?! 


 

இதையும் படிங்க: வாரிசு நடிகருடன் அடுத்த கூட்டணி.?! லோகேஷின் புது படம் பற்றிய தகவல் லீக்.!