நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
உங்கள இப்படி பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. செம கியூட்... மாடர்ன் உடையில் நந்தினி சீரியல் நடிகை நித்யாராம்! வைரல் புகைப்படம்...
நந்தினி சீரியல் நடிகை நித்யாராமின் கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் இயக்குனர் சுந்தர் சி தாயாரிப்பில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றி பெற்ற தொடர் நந்தினி. இந்த தொடரில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நித்யாராம். வித்தியாசமான கதைகளத்துடன் ஒளிப்பரபாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது நந்தினி தொடர்.

இத்தொடரில் நித்யாராம் நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் அளவுக்கு இருந்தது. இதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவாகியது. பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோரிலும் நித்யாராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.
பின்னர் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் கவனம் செலுத்தாதஇவர் , விரைவில் நந்தினி 2 மூலம் ரசிகர்களை சந்திக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மாடர்ன் உடையில் வானத்தை பார்த்து கை நீட்டினப்படி கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், உங்களை இவ்வளவு க்யூட்டா பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என கமெண்ட் செய்துவருகின்றனர்.