சினிமா

வாவ்... செம கியூட்...சீரியல் நடிகை நந்தினி வெளியிட்டுள்ள கியூட் வீடியோ!

Summary:

சீரியல் நடிகை நந்தினி மைனாவின் மகன்  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை நந்தினி மைனாவின் மகன்  வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி மைனா. சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் அன்றிலிருந்து மைனா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

சீரியலில் மிகப் பிரபலமாக இருந்த இவர் ஏற்கனவே ஜிம் மாஸ்டர் ஒருவருடன் திருமணம் முடிந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை நந்தினி மைனா காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது. இக்குழந்தைக்கு துருவன் என பெயர்வைத்துள்ளனர்.

மேலும் சீரியலில் பிஸியாக இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில்  தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் நந்தினி அவரது மகன் துருவன் மெம்மரி  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement