முத்தமிட்டு மொத்த அன்பையும் காட்டின மைனாவின் கணவர்! இணையத்தில் தீயாய் பரவும் ரொமான்டிக் புகைப்படம்.....



Serial actor maina nandhini  latest photo

சீரியல் நடிகை நந்தினி மைனாவிற்கு அவரது அன்பு காதலன் முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தின புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி மைனா. சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் அன்றிலிருந்து மைனா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.

முதல் கணவன் இறந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை நந்தினி மைனா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிகளுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை உள்ளது.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் வேலைக்காரன் சீரியலில் நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் கலகலப்பு நிறைந்த பேச்சு, துருதுரு நடிப்பு ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

 

மேலும் சீரியலில் பிஸியாக இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவரது அன்பு கணவர் மைனாவின் தலையில் முத்தமிட்டு மொத்த அன்பையும் காட்டின புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.