சினிமா

செம ஷேப்பு... செம பீஸ்ஸு... மாடர்ன் உடையில் மாஸ் டான்ஸ் ஆடும் கண்மணி சீரியல் நடிகை!

Summary:

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்  லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிக

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்  லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி என்ற தொடரில் சஞ்சீவ்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் லீஷா எக்லெர்ஸ். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவர் மாடலிங் துறையில் இருந்த போது பட வாய்ப்புகள் கிடைத்ததால் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

பின்னர் 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, என பல படங்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியல் மூலன் தான் பிரபலமானார்.

கண்மணி சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை பட்டாளத்தை பெற்றார். தற்போது சீரியல், சினிமா வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது மாடர்ன் உடையில் மாஸ்ஸாக டான்ஸ் ஆடின வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதோ அந்த வீடியோ..


Advertisement