விஷால் படத்தில் இணைந்துள்ள இயக்குனர் செல்வராகவன்.! செம மாஸா இருக்காரே.! வெளிவந்த வேற லெவல் ஸ்டில்!

விஷால் படத்தில் இணைந்துள்ள இயக்குனர் செல்வராகவன்.! செம மாஸா இருக்காரே.! வெளிவந்த வேற லெவல் ஸ்டில்!



selvaragavan-join-in-vishal-mark-anthony-movie

நடிகர் விஷால் லத்தி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடித்து வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இது விஷாலின் 33வது திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை  இயக்கியுள்ளார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோயினாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் எஸ்ஜே சூர்யா, சுனில், டிஎஸ்ஜி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

vishal

இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனர் செல்வராகன் முக்கிய ரோலில் நடித்திருப்பதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சிரஞ்சீவி என்ற கதாப்பாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். வெளிவந்த போஸ்டரில் அவர் செம மாஸான கெட்டப்பில் உள்ளார்.