சினிமா

ரஜினியின் பலநாள் சாதனையை இரண்டே நாளில் தூக்கி அடித்த நடிகர் விஜய்!

Summary:

Sarkar teaser beats endhiran teaser views

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் AR முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சர்க்கார். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் படத்தின் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. மேலும் சர்க்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. டீசரை பார்த்த ரசிகர்களையும் தாண்டி சாதாரண மக்களும் வெகுவாக பாராட்டினார்கள். டீசரும் மிகப்பெரும் வெற்றிபெற்றது.

வெளியான 24 மணி நேரத்தில் லைக்ஸில் முதலிடத்தை பிடித்தது சர்க்கார் டீசர். இதில் சிறப்பான செய்தி என்னவென்றால் இந்த டீசர் பயங்கர பொருட் செலவில் இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து எடுத்துவரும் 2.0 டீசரின் பார்வைகளை முறியடித்துள்ளது.

18.4 M பெற்றிருக்கும் 2.0 டீசரை வந்த 2 நாட்களிலேயே முந்தியுள்ளது, சர்கார் பட டீசர். இதிலிருந்து விஜய் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை அணுகி வந்துவிட்டார் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.


Advertisement