sarkar-song-on-during-interval-of-ccv
தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தளபதி விஜயின் மூன்றாவது படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் படத்தின் ஒரு பாடல் மட்டும் கடந்த வாரம் வெளியானது இப்படத்திலிருந்து ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியாகி இருந்தது.
மேலும் இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளிட்ட அறிக்கையில் வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாக உள்ளது என அறிவித்தது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது சிங்கிள் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் வெளியானது. இப்பாடல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் பெரும்பாலோனரை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் இந்த இரண்டாவது பாடலை திருநெல்வேலியில் உள்ள ஒரு பிரபலமான ராம் திரையரங்கில் செக்க சிவந்த வானம் படத்தில் இடைவெளியில் ஒளிபரப்பாகும் என்று அந்த திரையரங்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement