சினிமா

வெளியான 20 நிமிடத்தில் புதிய சாதனை படைத்த சர்கார் பட பாடல்...! ரசிகர்கள் கொண்டாட்டாம்...!

Summary:

sarkar-single-track-will-relaesed

பிரபல திரைப்பட இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் தற்போது " சர்கார் " என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்த படத்தில் இளைய தளபதி விஜய் அவர்கள் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இந்த சர்க்கார் என்னும் படம் தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் அமைந்த மூன்றாவது படமாகும்.

இந்த சர்க்கார் திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளிவர உள்ளது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் தான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் சில முக்கிய வேடங்களில் ராதாரவி, வரலட்சுமி மற்றும் சரத்குமார், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடபட்டது.
இந்த பாடல் வெளிவந்த சில நிமிடங்களிலே பல சாதனைகள் செய்தது. அதிலும் குறிப்பாக வெளியான ஒரு சில நிமிடங்களிலே 5 லட்சம் ஹிட்ஸை கடந்துவிட்டது. 20 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது. இன்னும் எந்தெந்த சாதனைகளை முறியடிக்க உள்ளதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடியிருக்கிறது... 


Advertisement