#Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
இணையத்தை கலக்க வரும் சர்கார் படத்தின் சிங்கிள் டிராக்; வெளியான தகவல்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. முழுவதும் அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.
மேலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.