"அந்த 15 நிமிடம் தான்.. இல்லனா படம் வேற லெவல்!" சர்க்கார் பற்றிய கருத்துsarkar-first-half-review

தீபாவளி தினமான இன்று சர்க்கார் திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் படத்தில் முதல் பகுதியைப் பற்றி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வரும் இன்று தீபாவளிக்கு வெளியாகியுள்ளது சர்க்கார் திரைப்படம். துப்பாக்கி மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு பிறகு முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

sarkar first half review

வழக்கம்போல் விஜயின் இந்த படமும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது கதைத்திருட்டு என்ற சர்ச்சைக்குள்ளாகிய இந்தப் படம் ஒரு வழியாக அந்த சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. படத்தின் முதல் காட்சியை பார்த்து வரும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படத்தினைப் பற்றிய கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதில் ஒரு நபர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருப்பதாவது "படத்தின் முதல் பகுதி 100% அரசியலை கொண்டுள்ளது. இதை போன்ற படங்களில் நடிக்க தளபதிக்கு உண்மையாகவே ஒரு மன தைரியம் வேண்டும். அதிமுகவை பற்றி பல்வேறு கருத்துக்கள் அமைந்துள்ளன. அம்மா, சின்னம்மா என யாரையும் விட்டுவைக்கவில்லை" என்று வெறித்தனமாக பதிவிட்டுள்ளார்.

sarkar first half reviewமேலும் "தளபதிக்கு அரசியல்ரீதியாக பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் மீண்டும் இதைப்போன்று அரசியலில் நடக்கும் ஊழல்களையும், முறையற்ற அரசாங்கத்தையும் எதிர்த்து பேச தளபதிக்கு ஒரு தைரியம் வேண்டும். இதனால் அவருக்கு இன்னும் பல பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால் அதைப்பற்றி அவர் பயப்படவேயில்லை. சமீபத்தில் நடந்த பல சம்பவங்களைப் பற்றி இந்த படத்தில் பேசியுள்ளார் விஜய். வரலட்சுமியின் நடிப்பு மிகவும் அற்புதமாக உள்ளது.

படத்தில் பாடல்கள் இடம் பெற்ற காட்சி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பொருத்தமாக அமையவில்லை. மேலும் படத்தின் கடைசி 15 நிமிடங்கள் வழக்கமான சினிமாவை போல் உண்மைக்குப் புறம்பாக நம்பமுடியாத அளவில் காட்சிகள் அமைந்துள்ளது. இதனால் படத்திற்கு சற்று சரிவை ஏற்படுத்தக் கூடும்" எனவும் பதிவிட்டுள்ளார்.

sarkar first half review