சினிமா

விஜய்யை திருமணம் செய்ய ஆசைபட்டேன்! கணவர் தடுத்து தள்ளிவிட்டார்! வெளிப்படையாக போட்டுடைத்த சரவணன்மீனாட்சி நடிகை!

Summary:

Saravanan meenachi ralk about senthilkumari

தமிழ் சினிமாவில் பசங்க திரைப்படத்தில் அன்பான அம்மாவாக நடித்ததன் மூலம் அனைவரின் மனதிலும் நீங்காத இடம்பிடித்தவர் செந்தில்குமாரி. அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர், சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் அன்பான மாமியாராக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். 

பின்னர் பல சீரியல்களில் நடித்த அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா என்ற தொடரில் நடித்து வருகிறார். மேலும் சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். மேலும் மெர்சல் திரைப்படத்தில் உருக்கமான இவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பேசப்பட்டது

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் செந்தில்குமாரி நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் நான் விஜய்யை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். அந்த அளவிற்கு விஜய்யின் தீவிர ரசிகை. அவரை  பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. 

இந்நிலையில் திருப்பாச்சி படத்தில் எனது சகோதரி சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அப்பொழுது விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. உடனே நான் அவரைப் பார்க்க வேண்டும் என ஆசையாக  கிளம்பிய போது எனது கணவர் என்னை தடுத்தார். அவர் தள்ளிவிட்டதில் எனது தலையில் பயங்கரகாயம் ஏற்பட்டு வீங்கியது. ஆனால் நான் எதனையும் பொருட்படுத்தாமல் அவரை பார்க்க சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.


Advertisement