சினிமா பிக்பாஸ்

சித்தப்பு சரவணன் இவ்வளவு மோசமாக வெளியேற்றப்பட்டாரா? வெளியான புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்!!

Summary:

saravanan leaving way from bigboss house

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 43 நாட்கள் முடிந்துள்ள நிலையில் இதுவரை 6 பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் பருத்திவீரன் சித்தப்பு சரவணனை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேற்றபட்டார்.

தான் பேருந்தில் பயணம் செய்யும் போது பெண்களை உரசியுள்ளதாக சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார். இதற்கு அவர் மீது பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து பிக்பாஸ் அவரை மன்னிப்பு கேட்க கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து ஒருசில நாட்கள் ஆகிவிட்ட  நிலையில் இதே காரணத்திற்காக சரவணன் பிக்பாஸ் வீட்டிலில் இருந்து வெளியேற்றபட்டார் .இதனால் அனைத்து பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Image result for bigg boss 3 tamil

இந்நிலையில் சரவணன் எப்படி வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் என்ற புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகைப்படத்தில் தீவிரவாதிகளை அழைத்துச் செல்வது போன்று சரவணனின் முகத்தில் கருப்பு துணி ஒன்றினை போட்டு வெளியே அழைத்துச் செல்ல தயாராகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement--!>