சினிமா

சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு ஜோடியாகும் மாடலிங் நடிகை! யார் தெரியுமா - வைரலாகும் புகைப்படம்.

Summary:

Saravana annachi arul pair geetika

தனது இடைவிடாத உழைப்பால் உயர்ந்து இன்று மிகப்பெரிய தொழிலதிபராக திகழ்பவர் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி. இவர் தனது கடை விளம்பரத்திற்கு தானே விளம்பரம் செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு தொழிலதிபரும் செய்யாததை இவர் செய்ததால் பல விதமான கிண்டலுக்கு ஆளானார்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது தற்போது அவர் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படி அந்த படத்தில் தனக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரை அனுகியுள்ளனர். ஆனால் அவர் ஒரு கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என கூறி மறுத்தார்.

அதனை அடுத்து நடிகையை தேடும் பணி நடைப்பெற்றது. இந்நிலையில் ஜுடி-ஜெர்ரி இயக்கும் புரொடக்‌ஷன் நம்பர் 1 படத்தில் தற்போது ஹுரோயினாக மாடலிங்கான கீத்திகா டிவாரி என்பவரை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை வேலைகள் நிறைவடைந்துள்ளது. அதில் நடிகர் பிரபு, விவேக் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது. தற்போது அப்படத்தின் ஹுரோயின் மற்றும் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement