சினிமா

நடிகர் சுஷாந்துடன் தாய்லாந்திற்கு டேட்டிங்! உண்மையை உடைத்து பிரபல நடிகை வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

Summary:

Sara ali khan went dating to thailand with sushanth

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் பாலிவுட் திரையுலகில் வாரிசு அரசியல் ஆதிக்கம் மற்றும் போதைப்பொருள் புழக்கம்தான் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் போதைப்பொருள் விவகாரம் தலை தூக்க துவங்கியது.

அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு நடிகர் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக், சுஷாந்த்தின் மேனேஜர் சாமுவேல் மிரண்டா உட்பட பலரையும் கைது செய்தனர். மேலும் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிபிஐ போலீசார்கள் நடத்திய விசாரணையில் நடிகை சாரா அலி கான், மும்பையிலுள்ள சுஷாந்தின் இல்லத்துக்கும், லோனாவாலாவில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கும் அடிக்கடி தான் சென்றதாகவும், சுஷாந்துக்கு போதைப் பொருள் பழக்கம் உண்டு ஆனால் தனக்கு அந்த பழக்கமில்லை என கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சாரா அலி கான் தான் நடிகர் சுஷாந்துடன் தாய்லாந்துக்கு டேட்டிங் சென்றதாக ஒப்புக் கொண்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது. சாரா 2018 ஆம் ஆண்டு கேதார்நாத் என்ற  படத்தில் சுஷாந்திற்கு ஜோடியாக அறிமுகமானார். அப்பொழுதே  இருவருக்கும் காதல் என்ற தகவல் பரவியது. ஆனால் இருவரும் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.


Advertisement