சினிமா

கயல் பட நடிகர் சந்திரன் மகனை பார்த்துள்ளீர்களா - அழகிய புகைப்படம் இதோ.

Summary:

Santhiran anjana son photo

பிரபு சல்மான் இயக்கத்தில் வெளியான கயல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருந்தார். சந்திரன் தான் நடித்த முதல் படத்தின் மூலமே பிரபலமானார். மேலும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

அதனை தொடர்ந்து நான் செய்த குறும்பு, திட்டம் போட்டு திருடுற கூட்டம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் இவர் சன் மியூசிக் மற்றும் சன் டிவி சேனலில் வீஜேவாக பணியாற்றி அஞ்சனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சந்திரன்-அஞ்சனா தம்பதியினருக்கு ருத்ராக்ஷ் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது அஞ்சனா தன் குழந்தையுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement