சினிமா

சந்தானத்தின் அடுத்த படத்தில் இணையும் முக்கிய பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

Summary:

Santhanam next movie update

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைச்சியில் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்த சந்தானம் ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தனது திறமையை நிரூபித்த அவர் பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவிற்குள் காலடி வைத்தார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னராக வலம் வந்த சந்தானம் சமீபகாலமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இந்த வருடம் வெளியான தில்லுக்கு துட்டு2, மற்றும் A1 படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானம் அவர்கள் டிக்கிலோனா என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். 

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நட்பே துணை கதாநாயகி அனேகா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்தும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement