சினிமா

அப்போ கொஞ்சம் சுமாராத்தான் ஆடுவாரு, விஜய்க்கு டான்ஸ் சொல்லி கொடுத்ததே நான்தான், பரபரப்பைக் கிளப்பிய பிரபல நடிகர்

Summary:

அப்போ கொஞ்சம் சுமாராத்தான் ஆடுவாரு, விஜய்க்கு டான்ஸ் சொல்லி கொடுத்ததே நான்தான், பரபரப்பைக் கிளப்பிய பிரபல நடிகர்

தமிழில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். விஜய் என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
 
மேலும் தளபதி விஜய் என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது அவருடைய டான்ஸ் தான்.

vijay with sanjeev க்கான பட முடிவு

 இதுகுறித்து அவரது நண்பர் சஞ்சீவ் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது,

 விஜயும்,நானும் கல்லூரியில்  படிக்கும் சமயங்களில் அவருக்கு நான் தான் டான்ஸ் சொல்லிக் கொடுப்பேன்.காலேஜ்  விழாக்களில் நாங்கள் டான்ஸ் ஆடுவோம்.அப்பொழுது  நான்தான் நடுவில் ஆடுவேன். விஜய் சைடில் தான் ஆடுவார் .

மேலும் அவருக்கு நான் தான் ஆட கற்றுக் கொடுப்பேன் அப்பொழுது கொன்ஜம்  சுமாராகத்தான் ஆடுவார். ஆனால் இப்பொழுது 50 பேர் ஆடினாலும் விஜய் மட்டும்தான் பார்க்க தோன்றும்.

 மேலும் விஜய்க்கு நான் தான் டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன் என்று இப்போது சொன்னால் அவரது ரசிகர்கள் என்னை செருப்பாலே  அடிப்பார்கள் என்று கிண்டலாக கூறியுள்ளார்.


 


Advertisement