சினிமா

ப்பா! என்னவொரு ரத்தவெறி! பார்த்தாலே நடுங்குதே.. மிரளவைக்கும் சாணிக்காயிதம் புதிய போஸ்டர்!

Summary:

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை,  இரண்டா

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன்,மயக்கம் என்ன,7ஜி ரெயிப்போ காலனி,புதுப்பேட்டை,  இரண்டாம் உலகம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல ஹிட் படங்களை இயக்கிதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் இயக்குனர் செல்வராகவன். இந்தநிலையில் 25 ஆண்டுகளாக இயக்குனராக இருந்த அவர் சாணிக்காயிதம் திரைப்படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தில் அவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன்  என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் இன்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து சாணிக்காயிதம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

     

அந்த போஸ்டரில் செல்வராகவன் ஒரு கையில் துண்டு பீடி, மறு கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்க, அவருக்கு அருகே ரத்தக் கறை படிந்த கால்கள் காணப்படுகின்றன. வெறித்தனமான இந்த போஸ்டர் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement