இரத்தம் தெறிக்க.. ஒவ்வொரு செகண்டும் மிரளவைக்கும் சாணிக் காயிதம் ட்ரைலர்!!

இரத்தம் தெறிக்க.. ஒவ்வொரு செகண்டும் மிரளவைக்கும் சாணிக் காயிதம் ட்ரைலர்!!



sanikayitham-movie-trailer-released

இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் சாணிக் காயிதம். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

சாணிக் காயிதம் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க, யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படமும் ரத்தம் தெறிக்க வன்முறையாக உருவாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. சாணிக் காயிதம் திரைப்படம் மே 6 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தில் செல்வராகவன் சங்கையா என்ற கதாபாத்திரத்திலும், கீர்த்தி சுரேஷ் பொன்னி என்ற கதாத்திரத்திலும் நடித்துள்ளனர். முழுதும் இரத்தம் தெறிக்க உருவாகியுள்ள டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.