சினிமா பிக்பாஸ்

கலகலப்பாக சுற்றி திரிந்த சாண்டிக்கு இப்படியொரு கஷ்டமா? கண்ணீர் விட்டு கதறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Summary:

sandy cry after seeing daughter photos

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், காதல் காட்சிகளும்  பஞ்சம் இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 3லும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் மிகவும் கலவரமாக காணப்படும் பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதும் விளையாட்டுத்தனமாகவும், சுறுசுறுப்பாகவும் சுற்றி திரிந்து பார்வையாளர்களால் பெருமளவில் ரசிக்கப்படுபவர் நடன இயக்குனர் சாண்டி. 

இவருக்கு நேற்று பிறந்த நாள் கொண்டாடப்பட்டது . இந்நிலையில் அவருக்கு பரிசளிக்கும் வகையில் பிக்பாஸ் அவரது மகளது புகைப்படங்களை பிளாஸ்மா டிவியில் வெளியிட்டது. அதில் சாண்டியின் குழந்தை தனது தந்தையின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுப்பது போன்ற பல புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் குழந்தையின் அழுகுரலும் ஒலிபரபரப்பப்பட்டது.

இதனை கேட்டதும் சாண்டி கண்ணீர்விட்டு அழ துவங்கிவிட்டார். மேலும் போட்டியாளர்கள் பலரும் அவரை கண்டு அழ துவங்கினர். இதனால் பிக்பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியது. 


Advertisement