சினிமா

ஆண் தேவதை - சமுத்திரக்கனியின் அடுத்த படம் படபிடிப்பு ஆரம்பம்...!

Summary:

samuthirakani-next-movie

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சமுத்திரக்கனி. இவர் தற்போது படங்களில் நடிக்கவும் செய்கிறார் மற்றும் இவர் நாடக இயக்குனர் ஆவார்.  
இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலான படங்கள் வெற்றி படம் தான் என்று கூற வேண்டும். இவர் 1997 -ம் ஆண்டு திரையுலகில் உதவி இயக்குனராக கே விஜயன் என்பவரிடம் பணிபுரிந்தார். பின்பு கே பாலச்சந்தரிடம் பார்த்தாலே பரவசம் திரைப்படத்தில் பணிபுரிந்தார். பிறகு வசன எழுத்தாளராகவும், கதை சொல்பவராகவும் பணியாற்றினார். சன் டிவியில் நாடகம் ஒன்று நடித்துள்ளார்.

மேலும் அதன் பிறகு சுப்ரமணிய புரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். நாடோடிகள் படத்தின் மூலம் இவரது இயக்குனர் பணியை தொடர ஆரம்பித்தார். நாடோடிகள் படம் நட்பை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார்.இவர் இதுவரை பல படங்களை இயக்கியும் பல படங்களில் துணை கதாப்பாத்திரமகவும் நடித்துவருகிறார். 

இவர் இப்போது ஆண் தேவதை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் தாமிரா இயக்கியுள்ளார்.


Advertisement